--- --:--:-- --

தலைக்கு நூறு ரூபாய்.. திமுக கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு பணம் பட்டுவாடா..!

4

உசிலம்பட்டி அருகே திமுக வேட்பாளர் வருகைக்காக பணம் கொடுத்து மக்களை அழைத்து வருவது குறித்து தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் எழுந்துள்ளது.

 

தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேலைப்பட்டி பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்பொழுது கூட்டம் சேர்ப்பதற்காக பெண்கள், சிறுவர்கள் அதிக அளவில் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

 

வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வாக்கு சேகரிக்க சென்றது. அனைவருக்கும் தலா 100 ரூபாய் வழங்கப்பட்டது. கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு பணம் விநியாகம் செய்யப்படுவதை காவலர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை என்று அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon