கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த நெல்லை.. பறந்த உத்தரவு
நாளை பிரதமர் மோடி வருகையை ஒட்டி நெல்லை அம்பையில் இரண்டு நாட்கள் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள தனியார் மைதானத்தில் நாளை தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி வரவுள்ளதால் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தங்கும் விடுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடமான பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பிரச்சார கூட்டத்திற்குள் வர தொண்டர்கள் மறுப்பது, மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆக இரண்டு நாட்களில் அம்பாசமுத்திரம் தாலுகா பகுதியை சுற்றியுள்ள சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





