பஸ் மீது மோதிய கார்..அண்ணாமலையாரை தரிசிக்க சென்ற போது நிகழ்ந்த சோகம்..!
திருவண்ணாமலை அருகே அரசு பேருந்தும், காரும் நெருக்கு நேர் மோதியதில் கர்நாடக போலீசார் 2 பேர் உயிரிழந்தனர். தேர்தல் பணிக்காக சேமிக்க வந்த கர்நாடகா சிறப்பு படை காவலர்கள் ஐந்து பேர் அண்ணாமலையார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய கீழ்பெண்ணாத்தூர் பைபாஸ் சாலை வழியாக கார் சென்ற பொழுது எதிரே வந்த அரசு பேருந்து மீது கார் மோதியதாக கூறப்படுகிறது.
2 காவலர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மூன்று பேர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





