--- --:--:-- --

வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து..தவித்த பயணிகள்..!

4

கென்யாவில் வெள்ளத்தின் மூழ்கிய பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். நூலா என்ற பகுதியில் 61 பயணிகளுடன் சென்ற பேருந்து திடீரென வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டது.

 

பேருந்துக்குள் பாதிக்கும் மேல் வெள்ள நீர் புகுந்த நிலையில் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். பயணிகள் சிலர் பேருந்திற்கு மேல் பகுதியில் ஏறி அமர்ந்து கொண்டனர்.

 

உடனடியாக அருகில் இருந்தவர்கள் கயிற்றின் மூலம் பயணிகளை அங்கிருந்து மீட்டுள்ளனர். பேருந்திலிருந்து 51 பயணிகளும் எந்த பாதிப்பும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon