--- --:--:-- --

நாளை மறுநாள் தமிழ்நாடு வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா..!

1

தேர்தல் பரப்புரைக்காக நாளை மறுநாள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வருகிறார். இரண்டு நாட்கள் பயணத்தின்போது சிவகங்கை, மதுரை, கன்னியாகுமரி, தென்காசி தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

 

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

 

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். குமரி மாவட்டத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுடன், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

 

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் நந்தினி என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 13-ம் தேதி மதுரையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு பிரசாரம் செய்ய வருகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon