--- --:--:-- --

திருமணம் செய்ய ஆசை இருக்கிறது.. ஆனால் நோய் இருக்கிறதே – நடிகை மும்தாஜ்

6

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷி படத்தில் விஜயுடன் கட்டிபுடி கட்டிபுடிடா பாடலுக்கு மும்தாஜ் ஆடிய நடனம் இன்றும் ரசிகர்களுக்கு நினைவுக்கு இருக்கும். தற்போது படங்களில் நடக்காத நிலையில் சமீப காலமாக மும்தாஜ் புர்காவில் மட்டும்தான் பார்க்க முடிகிறது.

 

இந்த நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த மும்தாஜ் தாம் திருமணம் செய்து கொள்ளாதது பற்றி என்னென்னவோ பேசுகிறார்கள் என்றும் தனக்கு 25 வயது இருக்கும்போது ஆட்டோ இம்யுன் டிசார்டர் நோய் இருப்பது தெரிய வந்தது என தெரிவித்துள்ளார்.

 

இந்த நோயுடன் திருமண வாழ்க்கை வாழ முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன் என்றும், இதனால் தான் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

மற்றவர்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக இருப்பதை பார்க்கும் பொழுது தனக்கும் அப்படி இருக்க வேண்டும் என தோன்றுவதாகவும் ஆனால் மனரீதியாக அதற்கு தான் தயாராக இல்லை என்பதை உணர்ந்தேன் என்றும் மும்தாஜ் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon