ரயிலில் வட மாநிலத்தவரின் ஓசி பயணம்..அதிர்ச்சி முடிவு..!
டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்த ஒடிசாவை சேர்ந்த ஒருவர் தன்னை தட்டி கேட்ட டிக்கெட் பரிசோதகரை கீழே தள்ளிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் வினோத் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் ஆன இவர் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா செல்லும் ரயிலில் டிக்கெட் பரிசோதவராக பணியாற்றி வந்தார். வட மாநிலத்தை சேர்ந்த சிலர் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது வினோத், ரஜினிகாந்த் என்பவரை திடீர் என கீழே தள்ளிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திருச்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்து விரைந்த அதிகாரிகள் வினோத்தை தண்டவாளத்தில் தேடிய பொழுது திருச்சூர் தண்டவாளத்தில் அவர் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





