என் வாக்கு என் உரிமை என்ற தலைப்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி..!
நூறு விழுக்காடு பொதுமக்கள் வாக்களிக்க வலியுறுத்தி மதுரை மாவட்டம் மேலூரில் மனித சங்கிலி நடைபெற்றது. பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை சிறப்புடன் ஆற்ற வேண்டும் என வலியுறுத்தி என் வாக்கு என் உரிமை என்ற தலைப்பில் தனியார் கல்லூரியில் மகளிர் கல்லூரியின் விழிப்புணர்வு மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தொடங்கி வைத்த விழிப்புணர்வு இயக்கத்தில் கல்லூரி மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை பதாகைகளுடன் நின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





