பெரம்பலூரில் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்த 15 பேர்..!
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக ஒரே நாளில் 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 15 சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் சாமானிய மக்கள் கட்சி வேட்பாளர்கள் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதிமுக சார்பில் போட்டியிட ஏற்கனவே சந்திரமோகன் வேட்பு மனு அளித்த நிலையில் அவரது சகோதரன் ராஜ்மோகன் மாற்று வேட்பாளராக வேட்பு மனு அளித்தார். ஒரே நாளில் 15 பேரும் வேட்பு மனுக்களை அறிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





