--- --:--:-- --

அரசு கொரடா, எம்.பி நிகழ்ச்சிக்கு அழைத்துவிட்டு காக்க வைத்ததாக புகார்..!

3

ஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அரசு கொரடா மற்றும் நிகழ்ச்சிக்கு அழைத்து காக்க வைத்த பிறகு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறி ஓஎன்ஜிசி அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு ஓஎன்ஜிசி சார்பில் இலவச பேட்டரி கார் வழங்கும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் தலைமை கொரடா எம்.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டிருந்தனர். நீண்ட நேரம் ஆகியும் நிகழ்ச்சி தொடங்கப்படாமல் இருந்ததால் ஓஎன்ஜிசி அதிகாரிகளிடம் அரசு கொறடா மற்றும் எம்.பி.யின் உதவியாளர்கள் கேட்டிருக்கின்றனர்.

 

அப்பொழுது பேட்டரி கார் மாலையில் தான் திருச்சியில் இருந்து வருவதாகவும் எனவே நிகழ்ச்சியை மாலை 5 மணிக்கு ஒத்திவைப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் கோபத்தை வெளிப்படுத்திவிட்டு புறப்பட்டு சென்றனர். இதனால் கும்பகோணத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon