--- --:--:-- --

வீட்டுக்குள் புகுந்து வட மாநில இளைஞர்..கட்டி வைத்த மக்கள்..!

2

நாகை அருகே வீட்டிற்குள் புகுந்த வட மாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த விமலா லியோனி என்பவர் அந்த பகுதியில் புத்தகக்கடை நடத்தி வருகிறார்.

 

இவரது வீட்டிற்குள் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கையில் கம்புடன் புகுந்துள்ளார். இதனால் விமலா அலறி கூச்சலிட்டுள்ளார். இதனை அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று வடமாநில இளைஞரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினார்.

 

தகவலறிந்து வந்த காவலர்கள் வட மாநில இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon