பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று தொடக்கம்..!
தமிழகம் முழுவதும் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகிறது. மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டு கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வுகள் மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி மார்ச் 20 இரண்டாம் தேதி வரை நடைபெற உள்ளன, இந்த தேர்வுகளை ஏழு லட்சத்தி 72 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள்.
இதற்காக 3300 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொது தேர்வு எழுதும் மாணவ மாணவியர் அச்சமின்றி தேர்வு எழுத வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





