17 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்.. டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு..!
தமிழகம் முழுவதும் 17 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னை, கடலூர், விருதுநகர், திருச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும் டிஎஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு உடனடியாக சென்று தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு டிஜிபி உத்தரவில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருக்கும் காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





