--- --:--:-- --

கருகிய நிலையில் கிடைத்த உடல்..!

5

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மின்சார ஒயர் குடிசையில் மீது பட்டு ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் தீயில் கருகி உயிரிழந்தார். முத்தண்டி காலனியைச் சேர்ந்த ஆண்டனி ராஜ் நேற்றிரவு அவரது வீட்டின் மாடியில் உள்ள குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

 

அப்பொழுது மாடியில் உள்ள மின்சார ஒயரிலிருந்து மின்கசிவு ஏற்பட்டதில் குடிசை தீப்பற்றி எரிந்து இருக்கிறது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்துள்ளனர்.

 

குடிசை வீட்டில் உள்ள கருகி நிலையில் இருந்த ஆண்டனியின் உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon