--- --:--:-- --

கரை ஒதுங்கிய மர்ம பொருள்.. மீனவர்கள் அச்சம்..!

6.1

சீர்காழி அருகே உருளை போன்ற மர்ம பொருள் கரை ஒதுங்கியதால் மீனவ மக்கள் அச்சமடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள நாயக்கன் குப்பம் மீனவ கிராமத்தில் சுமார் வெள்ளை நிற உருளை பொருள் கரை ஒதுங்கியது.

 

அதன்மேல் அபாயகரமானது என்றும் தொடாதீர்கள் எனவும் எழுதப்பட்ட நிலையில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கண்ட மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் உடனடியாக கடலோர பாதுகாப்பு போலீசருக்கு தகவல் அளித்தனர்.

 

விரைந்து வந்த போலீசார் குறிப்பிடப்பட்ட பகுதியை பாதுகாப்பு இணைப்பில் கொண்டுவந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon