12ம் வகுப்பிற்கான செயல்முறை தேர்வு.. படியில் அமர்ந்து உட்கார தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி..!
விருதாச்சலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோதனை அரங்கில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பிற்கான செயல்முறை தேர்வை மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரச பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பிற்கான செயல்முறை தேர்வு இன்று தொடங்கப்பட்டது.
இதில் 231 மாணவிகள் பங்கேற்ற நிலையில் மாவட்ட கல்வித்துறை அதிகாரி துறை பாண்டி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மாற்றுத்திறனாளி மாணவி சோதனை ஆய்வு கூடத்திற்கு செல்ல முடியாமல் படிகளில் அமர்ந்த தனது செய்முறை தேர்வு எழுதியதை கண்டு மாற்று திறனாளி மாணவியிடம் துயரத்தை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





