--- --:--:-- --

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. ரவுடியை ஓட ஓட விரட்டி படுகொலை..!

5

சென்னையில் ரவுடி ஒருவரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை காசிமேட்டில் அரங்கேறிய இந்த கொலை சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்தவரும் பிரபல ரவுடியுமான 24 வயது இளைஞர் வெங்கட்ராமன் படுகொலை செய்யப்பட்டார்.

 

வெங்கட்ராமன் மீது ஒன்பது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் திடீரென ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார் இளைஞர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon