--- --:--:-- --

பிளஸ் ஒன் மாணவி கூட்டு பலாத்காரம்.. சிக்கிய 18 பேர்..!

6

insta காதலை நம்பி ஆபாச புகைப்படங்களை அனுப்பிய பள்ளி மாணவியை காதலனின் நண்பர்கள் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரளாவின் பட்டணம்திட்டா அருகே பிளஸ் 1 மாணவி ஒருவர் நீண்ட நாட்களாக பள்ளி செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார். இதனையறிந்த அந்த பகுதி பொதுமக்கள் குழந்தை நல கமிட்டிக்கு தகவல் தெரிவித்து மாணவியை மீட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.

 

அப்பொழுது இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளைஞர் ஒருவரை மாணவி காதலித்து வந்தது தெரியவந்துள்ளது அந்த இளைஞர் மாணவியிடம் இருந்து வலுக்கட்டாயமாக அவரது அந்தரங்க புகைப்படங்களை கேட்டு பெற்ற நிலையில் அந்த புகைப்படத்தை வைத்து மிரட்டி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

பெண் புகைப்படங்களை தனது நண்பர்களுக்கும் இளைஞர் அனுப்பிய நிலையில் அந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டி இளைஞர்களை நண்பர்களும் அந்த மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 

இதனாலேயே பள்ளிக்கு செல்லாமல் மாணவி வீட்டுக்குள் முடங்கியது தெரிய வர விசாரணையை கையில் எடுத்த போலீசார் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் சிலரை போலீசார் கைது செய்த நிலையில் வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி தலைமையில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon