--- --:--:-- --

பெற்றோரின் அலட்சியத்தால் தண்ணீர் அண்டாவில் தலை குப்புற விழுந்த ஒன்றரை வயது குழந்தை..!

6

சென்னை ஆவடி அருகே அண்டாவில் தலை குப்புற கவிழ்ந்து விழுந்த ஒன்றரை வயதான குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆவடி அடுத்த ஜே ஜே நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரின் மகள் மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தையாக வசித்து வந்துள்ளார். முரளி வேலைக்கு சென்ற நிலையில் ரங்கம்மாள் உடல்நலக்குறைவு குறைவு காரணமாக ஓய்வு எடுத்துள்ளார்.

 

அப்பொழுது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஜீவானந்தம் குளியலறை அருகே தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த அண்டாவில் தலைகுப்புற கவிழ்ந்து விழுந்து மூழ்கியுள்ளது.

 

இது குறித்து அறிந்த தாய் ரங்கம்மாள் உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

 

தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் குழந்தை ஜீவானத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon