ஆய்வுக்காக சென்ற அமைச்சர் உதயநிதியின் காரை முற்றுகையிட்ட இளைஞர்கள்..!
திருச்செந்தூர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருச்செந்தூரில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.
அந்த வகையில் கடுமையாக பாதிக்கப்பட்ட திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் காயல்பட்டினம் உள்ள கிராமங்களுக்கு சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்செந்தூரில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து காயல்பட்டினம் பகுதிக்கு சென்ற அமைச்சர் உதயநிதியின் காரை முற்றுகையிட்டு அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தங்களது பகுதிக்கு ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் உதயநிதி சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தவுடன் அங்குள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்பொழுது இளைஞர்கள் உதயநிதியின் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





