சிலிண்டர் ஏற்றி வந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதிய கார்..!
நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன. கோட்டையம் மாவட்டத்தில் கஞ்சிரப்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது ஜீப் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
விபத்தில் ஜீப்பை ஓட்டி வந்த நபர் படுகாயம் அடைந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லாரி ஓட்டுனரும் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
கேரளா காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் சூழலில் விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





