தோழிகளோடு சிரித்து பேசிய மாணவி ..நொடிப் பொழுதில் நிகழ்ந்த விபத்து..!

கேரள மாநிலம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சாலையோரம் பேருந்துக்காக காத்திருந்த மாணவிகள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியது. மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

 

இடக்காபுரம் சாலையில் தாறுமாறாக வந்த கார் மோதியதில் பள்ளி மாணவி ஒருவர் தூக்கி வீசப்பட்டார். அதேசமயம் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்றவர்களும் காயமடைந்தனர்.

 

அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் விபத்து தொடர்பான பதற வைக்கும் சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது.