--- --:--:-- --

சிவகங்கையில் பதுங்கி இருந்த ஐந்தடி நீள மலைப்பாம்பு..!

6

சிவகங்கையில் பதுங்கி இருந்த மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். சிங்கம்புணரி அருகே வேங்கை பற்றி குடியிருப்பு பகுதியில் முட்புதூரில் மலை பாம்பு பதுங்கி இருப்பதாக பொதுமக்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

 

தகவலின் பெயரில் வீரர்கள் விரைந்து வந்து முட்புதரில் பதுங்கி இருந்து 5 அடி நீள மலைப்பாம்பை லாவமாக பிடித்து சென்றனர். மழைக்காலங்களில் குளிர்ச்சியான சூழ்நிலை இருப்பதால் வெப்பமான பகுதிகளை தேடி பாம்புகளிடம் இருந்து மக்கள் இருக்கும் பகுதிக்கு செல்லும் என்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon