--- --:--:-- --

தொடங்கிய மிசோரம் வாக்குப்பதிவு..!

7

ந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில், 40 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் மிசோ தேசிய முன்னணி சார்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டள்ளனர். பிரதான எதிர்கட்சியான சோரம் மக்களின் இயக்கமும், காங்கிரஸ் கட்சியும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மத்தியில் ஆளும் பாஜக 23 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் களம் காண்கின்றன.

 

174 வேட்பாளர்களின் எதிர்காலத்தை 8.57 லட்சம் வாக்காளர்கள் நிர்ணயம் செய்யவிருக்கின்றனர். 1276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

 

மிசோரம் முதலமைச்சர் சோரம்தங்கா. ஐஸால் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடிக்கு வாக்களிக்க சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் காத்திருந்த நிலையில், வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

 

7200 பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் டிரோன் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொலைதூரம் உள்ள வாக்கு மையங்களுக்கு வாக்காளார்கள் சென்று வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon