--- --:--:-- --

உடல் முழுவதும் பாம்பு போன்ற செதில்கள்.. வினோத நோயால் பாதிக்கப்பட்ட நபர்..!

6

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பொக்கில மேடு ஊராட்சியில் கேசவன் என்பவர் 7000 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் துப்புரவு ஊழியராக பணியாற்றி வருகிறார்.

 

தனது தாயாருடன் வசித்து வரும் கேசவனுக்கு பிறக்கும் போதே தோல் உரியும் குறைபாடு இருந்துள்ளது. உலகில் லட்சத்தில் ஒருவர் இந்த நோயுடன் பிறப்பதாக சொல்லப்படுகிறது.

 

இந்த நோயின் காரணமாக உடலில் ஏற்படும் கடும் எரிச்சலால் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார். ஒரு கிரீம் தடவினால் தான் உடல் எரிச்சலில் இருந்து தப்பிக்க முடியும். இதற்கு மாதம் 3,000 ரூபாய் செலவாகிறது.

 

வாங்கும் 7,000 சம்பவத்தில் 3 ஆயிரம் மருந்துக்கே செலவாகி விடுகிறது. இப்படி கஷ்டமான சூழலில் கேசவன் தவித்து வருகிறார். அரசு தனக்கு தேவையான உதவிகளை மனிதநேயத்துடன் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon