--- --:--:-- --

ஓடும் ஆட்டோவில் நெஞ்சு வலி தன் உயிரை மாய்த்து பெண் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்..!

4

குமரி அருகே ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த பொழுது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பயணியை கீழே குதிக்கச் சொன்ன ஓட்டுநர் குளத்தில் கவிழ்ந்த ஆட்டோவிற்குள் சிக்கி உயிரிழந்தார்.

 

ஜெகதாஸ் என்ற ஆட்டோ ஓட்டுனர் பெண் பயணியுடன் நல்லூர் குளத்தின் அருகே சென்று கொண்டிருந்த பொழுது ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆட்டோவை உடனடியாக நிறுத்த முடியாததால் ஆட்டோவில் பயணித்த பெண்ணை கீழே குதிக்குமாறு அவர் கூறியுள்ளார்.

 

அவர் கூறியவாறே குறித்த அந்தப் பெண் சிறு காயங்களுடன் உயர் தப்பினார். தொடர்ந்து ஆட்டோவை அவர் ஓட்ட முடியாமல் நிலைகுலைந்ததால் தாறுமாறாக ஓடி குளத்திற்குள் கவிழ்ந்தது. தண்ணீரில் மூழ்கி ஆட்டோ ஓட்டுனர் ஜெகதாசை அருகில் இருந்தவர்கள் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon