--- --:--:-- --

விபத்தில் பலியான இளைஞர்.. அடுத்த நொடியே உயிரை விட்ட அண்ணன் மனைவி..!

5

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கணவனின் தம்பி விபத்தில் சிக்கி உயிரிழந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அண்ணன் மனைவி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பெங்களூரு நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று எதிரே வந்த கார் மீது மோது விபத்திற்குள்ளானது.

 

விபத்தில் 7 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சேர்ந்த காமராஜ் என்பவரும் ஒருவர்.

 

இந்த நிலையில் காமராஜரின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சியில் இருந்த அவரது அண்ணனின் மனைவி செல்வி திடீரென மாரடைப்பு ஏற்பட்ட உயிரிழந்தது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கும் வேளையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon