கைது செய்யப்பட்ட நிலையில் நடிகர் விநாயகம் காவல் நிலையத்தில் செய்த காரியம்..!
ஜெயிலர் திரைப்படத்தில் வர்மன் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமான கேரளாவை சேர்ந்த நடிகர் விநாயகம் குடும்ப விவகாரத்தில் கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவை சேர்ந்த நடிகர் விநாயகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த விவகாரத்தில் நடிகர் விநாயகம் வீட்டிற்கு சென்று எர்ணாகுளம் காவல்துறையினர் இருதரப்பிலும் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
காவல்துறை விசாரணையில் திருப்தி அடையாத விநாயகம் காவல் நிலையம் சென்று விசாரணை நடத்திய பெண் அதிகாரி யார் என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்பொழுது காவல் நிலையத்தில் புகைப்பிடித்ததால் நடிகர் விநாயத்துக்கு உடனே அபராதம் விதிக்கப்பட்டது தொடர்ந்து காவல்துறை ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் நடிகர் விநாயகம் பேசியுள்ளார். இதுவரை வழக்கு பதிவு செய்த எர்ணாகுளம் காவல்துறையினர் நடிகர் விநாயகனை கைது செய்தனர்.
தொடர்ந்து எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் நடிகர் விநாயகம் மது அருந்தியதாக தெரிய வந்ததாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





