முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சில் தோல்வி பயம் தெரிகிறது : இபிஎஸ்
திமுக பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சில் தோல்வி பயம் தெளிவாக தெரிவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக எதிர் கட்சி தலைவரும் அதிமுகவின் பொது செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருப்பதில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் அடிப்படை ஆதாரம் இன்றி அரசியல் நாகரிகம் என்று பேசியதாக குற்றம் சாட்டுகிறார்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாகவும் பெண்கள் மீதான வன்கொடுமை அதிகரித்துள்ளதாகவும் சாடியுள்ளார். தன்னை பச்சை பொய் பழனிச்சாமி என்ற மு.க.ஸ்டாலின் கூறியதை சுட்டிக்காட்டிய பழனிசாமி முதலமைச்சர் ஸ்டாலின் தான் பொய் பேசுவதில் கைதே ர்ந்தவர் என்றும் பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால் அவருக்கு தான் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பொய் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு தமிழ்நாட்டில் நிலைமையையும் மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதையும் முதலமைச்சர் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





