கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்திட்ட தாள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்..!
விழுப்புரம் மாவட்ட நகர்புறத்திற்கான கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலரின் கையொப்பம் பெறப்பட்ட வெள்ளை தாள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் அளித்துள்ளது.
விழுப்புரம் நகர் பகுதி கிராம நிர்வாக அலுவலரின் கையொப்பமிட்ட வெள்ளை நிற தாள்கள் பணத்துக்கு மாற்றாக விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கிராம நிர்வாக அலுவலகத்தில் முறையாக வந்து செல்லாத நிலையில் அவரின் கையொப்பம் இட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட வெள்ளை தாள்கள் அடங்கிய புகைப்படம் வெளியான நிலையில் அது பொதுமக்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இருவருக்கும் சம்பந்தப்பட்ட காவல் நிர்வாக அலுவலரிடம் கேட்ட பொழுது முதியோர் உதவி தொகையை பெறுவதற்காக இணையத்தில் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் நிலவையில் இருப்பதாகவும் அந்த மனுக்களுக்காக வெற்றி தாள்களில் கையப்பம் இட்டு வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். தாசில்தார் தேவைக்கேற்ப நிரப்பி கொள்வதாக வைத்திருப்பதாகவும் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





