மகளிர் உரிமை திட்டம் – ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

கும்பகோணத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

 

இந்த நிலையில் கும்பகோணத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கவில்லை எனக் கூறி நூற்றுக்கணக்கான பெண்கள் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

 

ஆர்டிஓ அலுவலகத்தில் சர்வர் வேலை செய்யவில்லை என கூறப்படும் நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்.