வேலூரில் 5 முறை தாழ்வாக பறந்த விமானம்.. மக்கள் அதிர்ச்சி..!

வேலூர் விமான நிலையத்தில் ஓடுதளம் அருகே விமானத்தை தாழ்வாக இயக்கி 5 முறை சோதனை செய்யப்பட்டது. மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையத்தை சீரமைக்கும் பணிகள் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

 

இங்கிருந்து சென்னை பெங்களூர் திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கு 20 பயணிகள் பயணம் செய்யக்கூடிய சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட உள்ளன. அதற்காக 850 மீட்டர் நீளம் உள்ள விமான ஓடுதளம் தயார் செய்யப்பட்டுள்ளது.

 

விமான நிலையம் சரக்கு முனையம் தகவல் கட்டுப்பாட்டு வரை சிக்னல் கோபுரம் நிலை அலுவலகம் பயணிகள் காத்திருக்கும் வரை 90% பணிகள் நிறைவடைந்துள்ளது. இங்கிருந்து வரும் டிசம்பர் மாதத்திற்குள் விமான சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் விமான போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு சொந்தமான விமானம் புதுடெல்லியில் இருந்து சென்னை வழியாக வேலூருக்கு வரவழைக்கப்பட்டது.

 

வேலூர் விமான நிலையம் ஓடு பாதை அருகே ஐந்து முறை தாழ்வாக விமானத்தை இயக்கி சோதனை செய்யப்பட்டது.