--- --:--:-- --

அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டவருக்கு நடந்த அவலம்..!

7

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட நோயாளி ஒருவர் மின்சாரம் தடைபட்டதால் 3 மணி நேர காத்திருப்புக்கு பின் அறுவை சிகிச்சை செய்யாமலேயே திருப்பி அனுப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

சஞ்சய் என்ற அந்த நபருக்கு அறுவை சிகிச்சைக்காக 8 மயக்க ஊசிகள் போடப்பட்டதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் ஆகியும் மின்சாரம் வராததால் தன்னை திருப்பி அனுப்பி விட்டனர் என சஞ்சய் கூறினார். மருத்துவமனையில் ஜெனரேட்டர்கள் இருந்தும் உரிய பராமரிப்பு இல்லாததால் இயங்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon