ஸ்ரீ தேவி மகளை கைகோர்க்கும் அதர்வா!

மிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் அதர்வா. இவருக்கென தனி பெண்கள் ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

 

விக்னேஷ் சிவனின் அசோசியேட்டான ஆகாஷ் இயக்கும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக இவர் நடிக்கவிருக்கிறார். இதில் பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளாராம். இந்தப் படத்தை முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

 

அதர்வாவின் கேரியரில் இன்றுவரை அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இது இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.