திருப்பதிக்கு 108 தங்கதாமரைகளை அள்ளிக் கொடுத்த பிரபல நகை கடை உரிமையாளர்..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தங்கத்தால் 108 தாமரைகள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன. பிரபல நகை கடையின் உரிமையாளர் இந்த தங்க தாமரைகளை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

 

இவற்றின் மதிப்பு இரண்டு கோடி ரூபாய். ரங்கநாதர் மண்டபத்தில் திருப்பதி, திருமலை, தேவஸ்தான அதிகாரிகளுடன் இந்த தங்க தாமரைகள் ஒப்படைக்கப்பட்டன.

 

பிரத்யேக வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 108 தங்க தாமரைகள் செவ்வாய்க்கிழமைகளில் ஏழுமலையானுக்கு நடத்தப்படும் நிகழ்வில் பயன்படுத்தப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.