--- --:--:-- --

மனது மாறிய பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுத்த போலீசார்..!

3

சென்னையில் அரசு மதுபானத்தை பதுக்கி கள்ள சந்தையில் விற்று வந்த பெண் குற்றவாளியின் மனதை மாற்றி நடமாடும் உணவு கடை வைத்துக் கொடுத்துள்ளனர் காவல்துறையினர்.

 

ஐஸ் ஹவுஸ் பகுதி சேர்ந்த பாலம்மாள் என்பவர் கடந்த 10 வருடங்களாக டாஸ்மாக் கடைகளில் மதுபானத்தை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் காவல்துறையினர் அவரை தொடர்ச்சியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து வந்தனர்.

 

இந்த நிலை தொடர்ந்து நீடித்து வந்ததால் காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பொழுது போலீசார் தங்கள் சொந்த செலவில் தள்ளுவண்டி மற்றும் ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி மற்றும் உபயோகப் பொருட்களை வழங்கியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon