--- --:--:-- --

சாலை மறியலில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு..!

2

திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

 

சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழன் கீழ் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் கிடைத்தால் இந்த பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும்.

 

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பன உள்ளிட்ட காரணங்களை வலியுறுத்தி கிராமத்தை சேர்ந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் 50விழுகாட்டிற்கு மேல் பணி முடிவடைந்த நிலையில் இந்த திட்டத்தினை கைவிட முடியாது என கூறினர்.

 

அப்பொழுது காவல்துறையினருக்கும், பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கொண்டு வந்து அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்ததனால் காவலர்கள் தடியடி நடத்தினர். இதனை தொடர்ந்து பெண்கள் உள்ளிட்ட 67 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon