--- --:--:-- --

டீச்சரின் கழுத்தை அறுத்த காதலன்.. நாகையில் பயங்கரம்..!

6

நாகை அருகே காதலிக்க மறுத்த ஆசிரியையின் கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்ற காதலன் கைது செய்யப்பட்டான். தேசிராமன் தளத்தை சேர்ந்த ஜெய்ஸ்ரீ என்பவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

 

இவரும் மணிகண்டன் என்பவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்றோர் அறிவுரையின் பேரில் மணிகண்டனிடம் பேசுவதை ஜெயஸ்ரீ தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் கடைசியாக 10 நிமிடம் மட்டும் பேசுமாறு கோரி ஜெயஸ்ரீயை தனியாக அழைத்து சென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த ஜெய ஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon