காதல் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி வெயில் மழை பாராமல் கர்ப்பிணி போராட்டம்..!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காதல் கணவருடன் சேர்த்து வைக்க கோரி 9வது நாளாக கர்ப்பிணி பெண் போராட்டம் நடத்தி வருகிறார். வேடகவுண்டனுரை சேர்ந்த மோகன்ராஜ், பவித்ரா என்பவரை காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் பவித்ராவை மோகன்ராஜ் கைவிட்டு விட்டதால் கடந்த 23ஆம் தேதி முதல் கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து பவித்ரா போராட்டம் நடத்தி வருகிறார்.
ஒன்பதாம் நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் பவித்ரா கணவரை தம்முடன் சேர்த்து வாழ வைக்க வேண்டும் என காவல்துறைக்கும் அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





