திடீரென இரு தரப்பினர் இடையே வெடித்த மோதல்..!
நாகப்பட்டினம் அருகே உள்ள பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் குத்தகை கணக்கு தொடர்பாக கடந்த ஆறு மாதமாக இருப்பிட பிரச்சனை இருந்த நிலையில் மேலும் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
திமுகவை சேர்ந்த மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட 40 பேர் திடீரென திரண்டு அதே கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த ஜெகநாதனின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்ய முயன்ற பொழுது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





