மகளின் வீட்டில் தங்கிய மருமகனை கட்டையால் அடித்து கொன்ற மாமனார்..!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மருமகனை கட்டையால் அடித்துக் கொன்று தப்பியோடிய மாமனாரை போலீசார் தேடி வருகின்றனர். ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்ற இளைஞருக்கு மாசாணம் என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
மனைவியின் தந்தை முத்துக்குட்டி என்பவர் கடந்த ஆறு மாதங்களாக மகளின் வீட்டிலேயே தங்கி வந்துள்ளார். இதனால் மருமகனுக்கும், மாமனாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் மீண்டும் தகராறு ஏற்படவே ஆத்திரமடைந்த முத்து குட்டி, மருமகன் என்றும் பாராமல் நாகராஜனை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். வழக்கு பதிவு செய்து தப்பியோடிய முத்துக்குட்டியை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





