--- --:--:-- --

அம்ரித் பாரத் திட்டம் – பிரதமர் மோடி கொடுத்த சிக்னல்!

6

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் 1,000 சிறிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த திட்டத்தின் மூலம் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். எஸ்கலேட்டர் வசதி கொண்டு வரப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் செய்து தரப்படும். நடைமேடைகள் மேம்படுத்தப்படும். 5ஜி இணையச் சேவை பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். காத்திருக்கும் அறைகள் அமைக்கப்படும்.

 

கூடுதல் நடைமேடைகள் கொண்டு வரப்படும். வாகனங்கள் நிறுத்தும் வசதி, சிசிடிவி கேமராக்கள், நுழைவு வாயில்களை புதுப்பொலிவு பெறச் செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் 508 ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிகளை பிரதமர் மோடி இன்று  காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon