--- --:--:-- --

குடிபோதையில் பைக் மோதியதில் தந்தை படுகாயம்..குழந்தைகள் கதறல்..!

9

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வேலை தேடிச் சென்றவர் மீது குடிபோதை ஆசாமி பைக்கில் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த மலையரசன் என்பவர் வறுமை காரணமாக வேடசந்தூரில் வேலை தேடி அலைந்து கொண்டார்.

 

நேற்று மலையரசன் தனது மகனுடன் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் போதையில் வந்ததாக கூறப்படும் நபர் மோதியில் மலையரசனுக்கு கால் மற்றும் தலையில் படுகாயம் ஏற்பட்டது.

 

இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைக் கண்டு மனைவியும், குழந்தைகளும் அழுதது மனதை வருந்த செய்கிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon