குறுக்கே வந்த நாய்.. லாரி மீது மோதிய பேருந்து..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது லாரி ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் சென்ற தனியார் பேருந்து மோதியதில் ஓட்டுநர் பயணிகள் உட்பட 20 பேர் காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சாலையின் குறுக்கே சென்ற நபர் மீது மோதாமல் இருக்கவே பிரேக் போட்டதாக லாரி ஓட்டுனர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





