எலிவலைக்குள் பதுங்கி இருந்த ஆறடி நீள பாம்பு..!
நாகர்கோவில் அருகே வீட்டில் முன் பகுதியில் பதுங்கி இருந்த பாம்பினை தீயணைப்புத் துறையினர் லாவகமாக மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வலசேரி பகுதியில் உள்ள ராமசாமி என்பவரின் வீட்டின் அருகில் உள்ள வேப்பமரத்திலிருந்து சுமார் 6 அடி உயரமுள்ள பச்சை நிற பாம்பு ஒன்று பறந்து வீட்டின் கீழ் தள படிக்கட்டுக்கு அடியில் சென்றுள்ளது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பெயரில் தீயணைப்பு துறையினர் சென்றுள்ளனர். அங்கிருந்து எலி வலைக்குள் பதுங்கி இருந்த பாம்பினை தீயணைப்புத் துறையினர் லாவகமாக பிடித்து தங்களுடன் எடுத்து சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





