சென்னை மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை.. சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு..!
தவறான சிகிச்சையால் குழந்தை கை அகற்றப்பட்டதாக தாய் குற்றம் சாட்டியிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தையானது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த ஓர் ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தது.
குறிப்பாக தலையில் நீர் கட்டியின் காரணமாக தலையில் இருக்கக்கூடிய நீர் கட்டியை வெளியேற்றுவதற்கான அறுவை சிகிச்சை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் செய்யப்பட்டிருந்தன.
அதில் ஏற்பட்டிருந்த திடீர் கோளாறு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதற்கான அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருந்ததையடுத்து அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் இரண்டு தினங்களில் கையில் வென்சிலேட்டர் என சொல்ல கூடிய ஊசி செலுத்தப்பட்டிருந்தது.
அந்த ஊசியானது தவறான முறையில் செலுத்தப்பட்டதன் காரணமாக வலது கையானது ரத்த ஓட்டத்தினால் பாதிக்கப்பட்டு கை அழுகியது. இதன் காரணமாக எழும்பூர் அரசு மருத்துவமனையில் அந்த குழந்தை அனுமதிக்கப்பட்டு குழந்தையின் கை அகற்றப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதன் காரணமாக குழந்தையின் பெற்றோர்கள், மருத்துவர் மற்றும் செவிலியர்கள் கவனக்குறைவின் காரணமாக இருந்ததனால் குழந்தையின் கையானது தற்பொழுது பறிபோய் உள்ளதாக குற்றச்சாட்டை முன் வைத்திருந்தனர்.
அதனை தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சரும் நேரடியாக சென்று அந்த குழந்தையின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டிருந்தால் இந்நிலையில் அந்த குழந்தை இன்று காலை உயிரிழந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





