--- --:--:-- --

ஓடும் ரயிலில் பாதுகாப்பு படை வீரர் நான்கு பேரை சுட்டுக்கொன்ற அவலம்..!

2

ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த ஜெய்கோ எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருந்து மும்பை நோக்கி ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் சென்று கொண்டுள்ளது. ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் திடீரென்று பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.

 

இதில் உதவி ஆய்வாளர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட வீரர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon