--- --:--:-- --

புல் அறுக்க சென்ற விவசாயி.. ஆற்றங்கரையில் கேட்ட அலறல் சத்தம்..!

10

கேரளாவில் ஆற்றங்கரையில் மாட்டுக்கு புல் அறுக்க சென்ற விவசாயி முதலையால் கடித்து இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் போலீசார் தேடி வருகின்றனர்.

 

வயநாடு ஊரணி கீழ்நிலை பகுதியை சேர்ந்த விவசாய சுரேந்திரன் அங்குள்ள குண்டுவயல் ஆற்றங்கரையில் புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் நேரில் சென்றனர்.

 

சுரேந்திரனை முதலை இழுத்து சென்றதா அல்லது வேறு வனவிலங்கு இழுத்துச் சென்றதாக என தெரியாத நிலையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon