தாயை பராமரிக்காததால் சொத்தை இழந்த மகள்..!
திருப்பூரில் தாயை பராமரிக்காததால் மகளுக்கு எழுதிக் கொடுத்த இருந்த சொத்து பத்திரப்பதிவை ரத்து செய்யும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
உடுமலைப்பேட்டையை சேர்ந்த ராஜம்மாள் தனக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் நிலத்தை மகள் சுகுணா பெயருக்கு 2016 ஆம் ஆண்டு மாற்றிக் கொடுத்திருக்கிறார்.
ஆனால் மகள் உறுதி அளித்தபடி தன்னை பராமரிக்கவில்லை என்று ராஜம்மாள் கொடுத்த புகாரில் பத்திரப்பதிவை ரத்து செய்து உடுமலைப்பேட்டை தாலுகா வருவாய் அதிகாரி உத்தரவிட்டார். அதனை எதிர்த்து சுகுணா வழக்கு தொடர்ந்தார். அதில் பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது சரியே என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





