--- --:--:-- --

மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் விடுத்த சுற்றறிக்கை.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்..!

5

சென்னை பல்கலைக்கழக மாணவர்களிடம் அரசியல் சங்கங்களின் உறுப்பினர்களாக இருக்கக் கூடாது என கையெழுத்து வாங்குவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

சமூகவியல் துறை முதல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் மாணவர்கள் அரசியல் சார்ந்த அமைப்பு சங்கங்களின் உறுப்பினராக இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அப்படி அரசியல் சார்ந்த மாணவர்கள் செயல்பட்டால் அவர்களை உடனடியாக பல்கலைக்கழகத்திலிருந்து நீக்க துணை தலைவர்களுக்கு அதிகாரம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

மாணவர்களுக்கு அரசியல் சார்பு இருக்கக் கூடாதா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதனால் சுற்றறிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சென்னை பல்கலைக்கழக துணை வேந்தரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon